தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நகைஆகின்றே


நகைஆகின்றே

245. நெய்தல்
நகையாகின்றே-தோழி!-'தகைய
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ,
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி,
5
ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல்,
தெளி தீம் கிளவி! யாரையோ, என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?' என,
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி,
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின்
10
தான் அணங்குற்றமை கூறி, கானல்
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி,
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது.-அல்லங்கீரனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:07:59(இந்திய நேரம்)