தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாடல் சான்றோர்


நாடல் சான்றோர்

327. நெய்தல்
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே-காதல்அம் தோழி!-
அந் நிலை அல்லஆயினும், 'சான்றோர்
5
கடன் நிலை குன்றலும் இலர்' என்று, உடன் அமர்ந்து,
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே-போது அவிழ்
புன்னை ஓங்கிய கானற்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே.
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந் தது.-அம்மூவனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:08:35(இந்திய நேரம்)