தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நீர் அற வறந்த


நீர் அற வறந்த

99. முல்லை
'நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை,
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர
5
இதுவோ?' என்றிசின்-மடந்தை!-மதி இன்று,
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல-
பிடவமும், கொன்றையும் கோடலும்-
10
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே.
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது.-இளந்திரையனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:10:13(இந்திய நேரம்)