தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நெடுங் கடல்


நெடுங் கடல்

175. நெய்தல்
நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர்
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ,
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய
சிறு தீ விளக்கில் துஞ்சும், நறு மலர்ப்
5
புன்னை ஓங்கிய, துறைவனொடு அன்னை
தான் அறிந்தன்றோ இலளே; பானாள்
சேரிஅம் பெண்டிர் சிறு சொல் நம்பி,
சுடுவான் போல நோக்கும்,
அடு பால் அன்ன என் பசலை மெய்யே.
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:10:49(இந்திய நேரம்)