தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

படு நீர்ச் சிலம்பின்


படு நீர்ச் சிலம்பின்

188. குறிஞ்சி
படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை,
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்
மெல் விரல் மோசை போல, காந்தள்
5
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப!
'நன்றி விளைவும் தீதொடு வரும்' என,
அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத்
தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே.
பகற்குறி மறுத்து வரைவு கடாயது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:12:50(இந்திய நேரம்)