தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிறை வனப்பு


பிறை வனப்பு

263. நெய்தல்
பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்
இறை வரை நில்லா வளையும், மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு
உரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு,
5
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது,
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு,
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம் புலம்பற் கண்டு, நிலைசெல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு,
10
உரைத்த-தோழி!-உண்கண் நீரே.
சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு கடாயது.-இளவெயினனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:14:16(இந்திய நேரம்)