தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பேர் ஊர் துஞ்சும்


பேர் ஊர் துஞ்சும்

132. நெய்தல்
பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப்
பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி
போர் அமை கதவப் புரை தொறும் தூவ,
5
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப்
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை
அயலும் மாண் சிறையதுவே; அதன்தலை,
'காப்புடை வாயில் போற்று, ஓ' என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
10
ஒன்று எறி பாணியின் இரட்டும்;
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே?
காப்பு மிகுதிக்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:16:12(இந்திய நேரம்)