தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பொன்னும் மணியும்


பொன்னும் மணியும்

166. பாலை
பொன்னும் மணியும் போலும், யாழ நின்
நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்;
போதும் பணையும் போலும், யாழ நின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்:
5
இவை காண்தோறும் அகம் மலிந்து, யானும்
அறம் நிலைபெற்றோர் அனையேன்; அதன்தலை,
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்;
வினையும் வேறு புலத்து இலெனே; நினையின்,
யாதனின் பிரிகோ?-மடந்தை!-
10
காதல் தானும் கடலினும் பெரிதே!
செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:17:00(இந்திய நேரம்)