தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மடல் மா ஊர்ந்து


மடல் மா ஊர்ந்து

377. குறிஞ்சி
மடல் மா ஊர்ந்து, மாலை சூடி,
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி,
பண்ணல் மேவலமாகி, அரிது உற்று,
5
அது பிணி ஆக, விளியலம்கொல்லோ-
அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த
பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல,
அளகம் சேர்ந்த திருநுதல்
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே?
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், தோழி கேட்ப, தன்னுள்ளே சொல்லியது.-மடல் பாடிய மாதங்கீரனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:17:12(இந்திய நேரம்)