தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முயப் பிடிச் செவியின்


முயப் பிடிச் செவியின்

230. மருதம்
முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை,
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை,
கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது,
குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும்
5
கயற்கணம் கலித்த பொய்கை ஊர!
முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்;
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க,
புதுவறம்கூர்ந்த செறுவில் தண்ணென
மலி புனல் பரத்தந்தாஅங்கு,
10
இனிதே தெய்ய, நின் காணுங்காலே.
தோழி வாயில் மறுத்தது.-ஆலங்குடி வங்கனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:19:49(இந்திய நேரம்)