தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முழங்கு கடல் முகந்த


முழங்கு கடல் முகந்த

347. குறிஞ்சி
முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
மாதிர நனந் தலை புதையப் பாஅய்,
ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு,
வான் புகு தலைய குன்றம் முற்றி,
5
அழி துளி தலைஇய பொழுதில், புலையன்
பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன,
அருவி இழிதரும் பெரு வரை நாடன்,
'நீர் அன நிலையன்; பேர் அன்பினன்' எனப்
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி
10
வேனில் தேரையின் அளிய,
காண வீடுமோ-தோழி!-என் நலனே?
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுக்க மறுத்தது.-பெருங்குன்றூர் கிழார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:20:19(இந்திய நேரம்)