தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பொதுக்கயத்துக்கீரந்தை


பொதுக்கயத்துக்கீரந்தை

337. குறிஞ்சி
முலையே முகிழ்முகிழ்த்தனவே, தலையே
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே;
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின;
சுணங்கும் சில தோன்றினவே; அணங்கு என
யான் தன் அறிவல்; தான் அறியலளே;
யாங்கு ஆகுவள்கொல் தானே-
பெரு முது செல்வர் ஒரு மட மகளே?
தோழியை இரந்து பின்னின்ற கிழவன் தனது குறை அறியக் கூறியது.- பொதுக் கயத்துக் கீரந்தை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:19:47(இந்திய நேரம்)