தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

யாய் ஆகியளே விழவு


யாய் ஆகியளே விழவு

10. மருதம்
யாய் ஆகியளே விழவு முதலாட்டி;
பயறு போல் இணர பைந் தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக்
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள் ஆகலின், நாணிய வருமே.
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - ஓரம்போகியர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:41:44(இந்திய நேரம்)