தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வார் உறு வணர் கதுப்பு


வார் உறு வணர் கதுப்பு

82. குறிஞ்சி
வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு,
'அழாஅல்' என்று நம் அழுத கண் துடைப்பார்;
யார் ஆகுவர் கொல்?-தோழி!-சாரல்
பெரும் புனக் குறவன் சிறு தினை மறுகால்
கொழுங் கொடி அவரை பூக்கும்
அரும் பனி அற்சிரம் வாராதோரே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் 'வருவர்' என்று வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - கடுவன் மள்ளன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:43:27(இந்திய நேரம்)