தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விரிதிரைப் பெருங்கடல்


விரிதிரைப் பெருங்கடல்

101. குறிஞ்சி
விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும்,
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்,
இரண்டும், தூக்கின், சீர் சாலாவே-
பூப் போல் உண்கண், பொன் போல் மேனி,
மாண் வரி அல்குல், குறுமகள்
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது; (பொருள்) வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியதூஉம் ஆம். - பரூஉ மோவாய்ப் பதுமன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:45:13(இந்திய நேரம்)