தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நீர் நீடு ஆடின்


நீர் நீடு ஆடின்

354. மருதம்
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்;
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்;
தணந்தனைஆயின், எம் இல் உய்த்துக் கொடுமோ-
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க்
கடும் பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே?
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- கயத்தூர் கிழான்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:59:35(இந்திய நேரம்)