தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நெஞ்சே நிறை ஒல்லாதே


நெஞ்சே நிறை ஒல்லாதே

395. பாலை
நெஞ்சே நிரை ஒல்லாதே; அவரே,
அன்பு இன்மையின், அருள் பொருள் என்னார்;
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே;
அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போலக்
களையார் ஆயினும், கண் இனிது படீஇயர்;
அஞ்சல் என்மரும் இல்லை; அந்தில்
அளிதோதானே நாணே-
ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படினே!
வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளாகிய கிழத்தி, 'நாம் ஆண்டுச் சேறும்' எனத் தோழிக்கு உரைத்தது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:59:53(இந்திய நேரம்)