Primary tabs
II
(செந்தமிழ்.)
கலித்தொகை (பாலைக்கலி, குறிஞ்சிக்கலி) மூலமும் நச்சினார்க்கினிய ருரையும்:--இப்புத்தகம் சென்னைப் பிரஸிடென்ஸி காலேஜின் தமிழ்ப்பண்டிதர் பிரும்மஸ்ரீ அநந்தராமையரவர்களால், பல பிரதிகளை வைத்து ஒப்புப்பார்த்து நன்கு பரிசோதித்து அச்சிடப்பட்டிருக்கிறது. இதற்குமுன்பு இந்நூல் ஸ்ரீமத். சி வை. தாமோதரம் பிள்ளை யவர்களாற் பதிக்கப்பட்டிருப்பினும் இப்பதிப்பில் மூலமும் உரையும் பல திருத்தமடைந்துள்ளன. பாட்டுக்களேனும் அவற்றின் பகுதிகளேனும் பிறநூலுரைகளில் எடுத்தாளப்பட்டவற்றை அவற்றிற் குரிய விவரங்களுடன் ஆங்காங்குக் குறித்தும் இன்னும் தோன்றிய பிற குறிப்புக்கள் வரைந்தும், முற்காலத்தவும் பிற்காலத்தவுமான நூற்றுக்கணக்கான நூல்களிலிருந்து பிரயோகங்கள் எடுத்துக்காட்டியும் அச்சிடப்பட்டிருக்கிறது. 18, 19ம் பக்கங்களில் 3-வது குறிப்பில் அருந்ததியைப் பற்றிய பல புராணங்களிலுள்ள கதைகளும் பலநூல்களிலும் வழங்கிவந்த பெயர்களும் ஒருங்கு சேர்த்துக் காட்டியிருப்பதும், இன்னும் கொல்லிப்பாவை முதலிய சில பல குறிப்புக்கள் அருமையான் ஆராய்ந் தெழுதியிருப்பதும் பாராட்டத்தக்கன. (ரக்தாக்ஷிu மார்கழிt.)
---------
(சுதேச மித்திரன்.)
கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியருரையும் (முதற் சஞ்சிகை. பாலையும் குறிஞ்சியும்) சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீமான் இ. வை. அனந்தராமையரால் பதிப்பிக்கப்பட்டது.
.....................இக்காலத்தவராலும் இது போற்றற்குரியதோவெனின் உரியதே யென்பது பல துறைகளிலுமுழைப்பவர் துணிபு பண்டைக் காலத்துத் தமிழரின் மதக் கோட்பாடுகள் எப்படிப்பட்டன. அவர் நன்றென்றும் தீதென்றும், அழகியதென்றும், அல்லாததென்றும் கருதியனயாவை. அவர்தம் அரசாட்சி எந்நிலைமையிலிருந்தது. அவருண்ட உணவும், உடுத்த உடையும், காதலித்த முறையும், கைப்பிடித்த ஒழுக்கங்களும் இன்றுபோலல்லாது வேறுபட்டிருந்தனவோ என்றும் பலவும் ஆராய்ச்சி செய்வோர் கலித்தொகையை ஒரு பொற்குவையேபோல் பாராட்டுவர்.