Primary tabs
இதுவுமது
(இ-ள்.) நல் அற அமுதம் உண்டார் - நல்லறமாகிய அமிர்தத்தையுண்ட (இருவரும்), வில்லினது எல்லை -(தம் எதிரில்) ஒருவிற்கிடைதூரம், கண்ணால் நோக்கி-கண்களால் கூர்ந்து நோக்கி, மெல் அடிகள் பாவி - அடிகளை மெல்லப்பெயர்த்து வைத்து, உயிர்க்கண் - உயிர்களிடத்து, நல்லருள் புரிந்து - நல்ல அருளுடன் விரும்பிக்காத்து, நகை முதலாய நாணி - நகைத்தல் முதலிய குற்றங்களின்றியடங்கி, இல்லவர் - இல்லறத்தார், எதிர்கொண்டு ஈயின்-முறைப்படி எதிர்கொண்டு (தூய உணவு) கொடுப்பார்களாயின், எதி்ர் கொள் உண்டியரும் ஆகி-(விதிப்படி) ஏற்றுமண்ணுவாம் என்ற நியம்முடையவராகி, வீதியூடு -(அவ்விராசமாபுரத்து) வீதியிடையே, நடந்தனர் - நடந்து சென்றனர்.(எ-று.)
இளைஞரிருவரும், முறைப்படி உணவேற்கச் சென்றன ரென்க.
வில்லினது எல்லை நான்கு முழம், நெடிது நோக்கின் இடையிலுள்ள சிற்றுயிர் கட்புலனாகா தாதலின், ஒருவிற்கிடையே கூர்ந்து நோக்கிச் செல்வாராயினர். பூமி அதிர்படலின்றி மெல்ல அடி பெயர்த்து நடந்தன ரென்பார். ‘மெல்லடிகள் பாவி‘ என்றார். பாவுதல் - அடிபெயர்த்து வைத்தல். உயிர்க்கண் நல்லருள்புரிந்து எனமாறுக. ஓரறிவுமுதலாகவுள்ள உயிர்களனைத்தையும் இரட்சிப்பதனால், ‘நல்லருள் புரிந்து உயிர்க்கண்‘ என்றார். நகைமுதலாய என்றவை அறுவகைத்துவர்ப்புக்களை.* அவை-நகைப்பு, விருப்பு,