Primary tabs
கொண்டு - இளம்பருவத் (துத் தவவேடத்)தைக் கொண்டு குழைந்து - மெலிவடைந்து, இவண் வந்தது - இவ்விடத்து வந்தது, என்கொல் - யாது காரணத்தாலோ ?’ என்றான் - என்று (தனக்குள்) கூறிக்கொண்டான். (எ-று.)
இளைஞரைக் கண்ட சண்டகருமன், மனங்கலங்கி எண்ணினானென்க. இளமையில் மேற்கொண்ட துறவும்,வனப்பும் எத்துணைப் பகைமையுடையோரையும் அன்பும் அச்சமும் கொள்ளச் செய்யு மாதலின், ‘ அண்டல... நீரார்‘ என்றார் ‘செறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச் சிறுவர்’ (அக. 66.) என்றது காண்க.
சண்டகருமன் மனங்கலங்கியதற்குக் காரணம், இனமைச் செவ்வியும் துறவுமே யென்க. பகைவரே அன்பு கொள்வராயின், ஏனையோர்க்குக் கூறவேண்டா வென்க. நீரார்க்கண்டனன் - இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலின் ஒற்றுமிக்கது. கலங்கா - கலங்கி; செய்யாவென்னும்வாய்பாட்டு வினையெச்சம். புண்டரீகம் - இங்குச் செந்தாமரை; திருமகள், செந்தாமரையில் வசிப்பவள். கொம்பு, கொம்பு போல்வாளுக்கு உவமையாகுபெயர். சண்டகருமனும் என்பதிலுள்ள ‘உம்மை’சிறப்பு. (25)
இளைஞரைப் பலியிடப் பிடித் தேகுதல்
(இ-ள்.) என மனத்து எண்ணி-(சண்டகருமன் இவ்வாறு) தன்மனத்தே ஆராய்ந்து, இரங்கியும் - இரக்கங்கொண்டபோதிலும், மன்னன் ஏவல்தனை நெஞ்சத்து நினைந்து - வேந்தன்கட்டளையை நெஞ்சில் நினைந்து, தன் உழையவரின்-தன் ஏவலரால், அவர்கள் தம்மை-அவ்விருவரையும், வவ்வி-வலிதிற் கைப்பற்றிக்கொண்டு, சினம் மலிதேவி கோயில்-சினம் நிறைந்த உருவமுடைய சண்டமாரியின்