தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium


- 41 -

தூய வுணவு கொடுப்பார்களாயின், ‘முறைப்படி ஏற்று உண்ணுவாம்‘ என்ற நியமமுடையவராதலின், ‘இல்லரவரெதிர்கொண்டீயின் எதிர்கொளுண்டியருமாகி’ என்றார்.  எதிர்கொண்டீயாக்கல் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளுவாம் என்ற நியமம் உடையார் என்பது இங்குப்பெறப்படும்.  நல்லற அமிர்து-சுதத்தாசாரியர் மொழிந்த அறவுரையாகிய அமிர்தம்; பிறவாநெறியாகிய முக்திநெறிக்குக் காரணமாதலின் அறம் அமிர்தமெனப்பட்டது. அமிர்தம்-சாவாமை. ‘சாவாமருந்து’ என்றார்(குறள்.82-ல்) தேவரும். அறத்தை அமிர்தென்றலை, ஊட்டரும் அறவமிர்துலகமுண்டதே‘,* ‘அறவியான்றானும் அறவமிர்தீந்தான’1 எனப்பலவிடத்தும் காணலாம். நல்லறவமிர்தம் என்பது உருவகம்.  பாதங்கழுவுதல், பாதபூசை செய்தல், உச்சஸ்தானத்திருத்தல் தவிர மற்றவை உபாசகர்களுக்கும் உண்டு.  (24)                                

மன்னவனேவல் பெற்ற சண்டகருமன் இளைஞர்களைக்

கண்டு கலங்குதல்

29. 
அண்டல ரெனினுங் கண்டா லன்புவைத் தஞ்சு நீரார்க்
 
கண்டனன் கண்டு சண்ட கருமனும் மனங்க லங்காப்
 
புண்டரீ கத்தின் கொம்பும் பொருவில்மன் மதனும் போன்று
 
கொண்டிளம் பருவ மென்கொல் குழைந்திவண் வந்த தென்றான்.

(இ-ள்.) அண்டலர் எனினும் - பகைவரேயாயினும், கண்டால் - நேரில் கண்டால், அன்புவைத்து - (பகைமை நீங்கி) அன்புகொண்டு, அஞ்சும் - (தீங்குபுரிதற்கு) அஞ்சத்தக்க, நீரார்-தன்மையினையுடைய இளைஞரிருவரையும்,சண்டகருமனும் - ‘கண்டனன் - கண்டான்; கண்டுமனங்கலங்கா -கண்டு மனங்கலங்கி, ‘ (இவ்விருவரும்), புண்டரீகத்தின்கொம்பும் - தாமரையில் வாழுந் திருமகளும், பொருவு இல்மன்மதனும் - ஒப்பில்லாமன்மதனும், போன்று - ஒத்து, (மிக அழகிய வுருவத்துடன்), இளம்பருவம்,

 

*

சீவக. 3060.
1
நீல. தரும. 118.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:50:59(இந்திய நேரம்)