Primary tabs
மாகித் தன் காலஎல்லைவரையிலுந் தங்கியிருந்து பயன்அளிக்க வேண்டிய காலத்தில் உதயத்திற்கு வந்து (வினைக்கீடாக) மறுபிறவியையும் துயரங்களையும் விளைவிப்பதனால், ‘அருவினை விளையுளாய அருந்துயர்ப் பிறவி‘ என்றார். அருவினை விளையுளாய பிறவி, அருந்துயர்ப் பிறவி என்க.
அருவினை, ஈண்டுத் தீவினை. (யசோ.52.) விளையுள்--உதயம்; வினை யெட்டினுதயத்தாகும் விபாகங்கள்‘*என்பது காண்க. நாம் இத்துணைக்காலம் உயிருடனிருக்கவேண்டும் என்று நமக்குக் காலஎல்லை (ஆயுஷ்யம்) இருப்பதுபோல, எண்வினைகளுக்கும் எல்லைகள் உள. அதனால், அவ்வினைகள் அவ்வுயிருடன் சிலகாலம் அடங்கியிருந்து பின்பு தமக்குரிய பயனை விளைவிப்பதனால் அது உதயம் எனப்படும். உயிருடன் வினைகள் அடங்கியிருப்பதைச் ‘சத்வம்‘ என்பர். பொறிவாயிலால் வினைகள் உயிருடன் சேர வருவதை ஊற்று எனவும். அவ்வினைகள் உயிருடன் சேர்ந்து பிணிப்பதைப் பந்தம் எனவும். அங்ஙனம் பிணித்த வினைகள் சிறிது காலம் (அதாவது அவ்வினைகளுக்கு ஏற்பட்டகால எல்லைவரையிலும்) உயிருடன் சேர்ந்து தங்கியிருப்பதைச் சத்வம் எனவும், பின்பு அவ்வினைகள் பயன்தருங் காலத்துத் துன்பம் முதலியன உண்டுபண்ணுவதை உதயம் எனவும், பயன் 1அளித்த பிறகு அவ்வினைகள் உயிரினின்றும் நீங்குவதை உதி்ர்ப்பு எனவும் கூறுப. ‘புஞ்சிய பந்த சந்த வுதயமோடு உதிர்ச்சியாக்கி’ என்று (மேரு.104) வாமனமுனிவர் கூறுவது மறிக. மருந்து உண்ட ஒரு மனிதனுக்கு அம்மருந்து (தனக்குத் தக்கவாறு) சிறிது நேரம் கடந்து பயன் அளிப்பதைப் போல, வினைகளும் உயிருடன் பந்தமாகித் தனக்குள்ள காலஎல்லைவரையிலு மடங்கியிருந்து பின்பு பயன் அளிக்கும் நேரத்தில் உதயத்
* மேரு. 791.
1 பயன் தருங்காலத்து எண்ணத்திற் கேற்பப் புதிய வினைமீட்டும் தொடரும் என்றுணர்க