Primary tabs
சியைக் குறிக்குங் கண்ணனாய் என்பதனோடு இயையும் எனினுமாம். அருளிற்றெல்லாம், என்பது ஒருமை பன்மை மயக்கம்; இனி அருளியது - முழுவதும் எனலுமாம். ‘நண்ணிய‘ என்பது நண்ணியது என்பதன் விகாரம். ‘கருமுகில்... ... வருவபோற் கலுழன் மேல் வந்து‘ (கம்ப. திருவவ.) என்பது காண்க. (41)
இதுவுமது.
(இ-ள்.) அருவினை விளையுள் ஆய - தீவினைகளின் உதயத்தாலாய, அருந்துயர் பிறவி தோறும் - தாங்கற்கரிய துயருறும் ஒவ்வொரு பிறவியிலும், வெருவிய மனத்து நம்மை - நடுங்கிய மன முடைய நம்மை, வீடு இலவிளைந்த வாறும் - (அவ்வினைகள்) விடுதலன்றி (த்தொடர்ந்து) பல இன்னல் விளைவித்த வாற்றையும், திருவுடைஅடிகள் தந்த - புண்ணிய மூர்த்தியான சுதத்தாசார்யர் (அருளுடன்) தெரிவித்த, திருவறப்பயனும்-திருவறத்தினாலாகும் நன்மையினையும், தேறி - தெளியவுணர்ந்து, நாம்--, வெருவி - (பிறவியின் சுழற்சிக்கு) அஞ்சி, விடுத்தவாழ்க்கை - பற்றின்றி விடுத்த (நம்) வாழ்க்கையினை, விடுவதற்கு அஞ்சல் உண்டோ - விட்டு நீக்குவதற்கு அஞ்சவேண்டயதுண்டோ? (இல்லையென்றபடி) (எ-று.)
வினைப்பயனும் அறப்பயனும் தெளிந்தநாம் மரணத்திற்கு அஞ்சுவதுண்டோ? இல்லை என்றன ளென்க
பிறவிதோறும் விளைந்தவாறும் பயனும் தேறிவெருவி விடுத்த வாழ்க்கை என இயைக்க. பொறிவாயிலால் ஈட்டிய தீவினைகள் அவ்வுயிருடன் சேர்ந்து பந்த
1 பாடம். வினையுளாய,
2 திருவிடை