Primary tabs
ஒரே பொருள் இப்படி ஏழுவிதமாக எங்ஙனம்பொருந்து மெனின், ஒரேமனிதன், தன்மகனை நோக்குழித் தந்தை யென்றும், தன்தந்தையை நோக்குழித் தனயனென்றும், மனைவியை நோக்குழிக் கணவனென்றும்,மாமனை நோக்குழி மருகனென்றும், இவ்வாறு பல முறையிட்டழைப்பது போலப் பொருந்துமென்க.இவ்வேழுபிரிவுகளையும்,
‘ஒரேழுபங்கவுரை வரம்பில் குணந்தோறும் ஒரு பொருளுக்கோதி‘
என்று (திருக்கலம்-81.) கூறியது அறிக.
இவ்வேழுவித பங்கங்களினாலேயே ஒரு பொருள் நித்யம், அநித்யம், பின்னம், அபின்னம், தூயதன்மை, தூயதல்லாத தன்மை முதலிய பலகுணங்கள் ஒவ்வொருவகையால் உள்ளதென உணருவதற்கும் பொருள்களை உள்ளவாறு காண்பதற்கும் தகுதியாகின்றன.
அறத்தை அமிர்தென்றல் நூல்வழக்கு ஆதலின், ‘மெய்ந்நூலமிழ்து'; என்றார், இதனை, ‘அங்கநூல் பயின்றுவல்லார் அறவமிர்து அளிக்குஞ் சொல்லார் ‘ (மேரு. 393) எனவும் ‘ ஊட்டரும் அறவமிர் துலக முண்டதே‘ (சீவக.3060) எனவும். ‘நல்லற வமிர்தமுண்டார'; (யசோ.28) எனவும் கூறியதனா லறியலாகும். ‘அமிழ்து'; என்றதற்கேற்ப, அளித்தல் கூறப்பட்டது. ‘நம் வினைகழுவும் நீரார'; என்றமையின் வினைக்கு அழுக்கு என்று பொருள் கொள்டப்பட்டது. பரமனன்னெறி, என்று பாடங்கொள்ளின் பரமன் அருளிய நெறி என பொருள் கொள்க. முனிகளாதலின் நெறி பஞ்சாசாரம் என்க. (51)
சர்வசாது வணக்கம்
1 பாடம் சேதியி னெறியின்.
2 சரணமக்.