Primary tabs
கூறினார். பலியிடுவதைக் கருதி மாரி மகிழ்ந்து அரசனுக்கு அருள் புரிவாள் என்ற மூடநம்பிக்கையால் ஏனைமாந்தர் அங்ஙனம் வாழ்த்துமாறு கூறினர். மரணகாலத்தும் அஞ்சாமல் நின்றமையால், ‘மலக்கிலா மனத்தர்';என மீண்டுங் கூறினார். ‘மலக்கு'; என்னுஞ் சொல் கலக்கம் என்ற பொருளில் வருதலை, ‘பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே'; என்ற குறுந்தொகை 194 ஆவது செய்யுளடியான் அறியலாம். ‘வறிது சிறிதாகும'; என்பது தொல்காப்பியம் இனி, வறிது பயினின்மை எனலுமாம். (54)
இளைஞர் மன்னனை வாழ்த்துதல்
(இ-ள்.) மறவியின் மயங்கி-கள்ளிற்போல (மோஹநீயத்தால்) மயங்கி, வையத்து உயிர்களை வருத்தஞ் செய்யாது - உலகிலுள்ள உயிர்களைத் துன்புறுத்தாமல், அறம் இயல் மனத்தைஆகி - அறம் நிறைந்த மனமுடையவனாகி, ஆர்உயிர்க்கு அருள்பரப்பி - அரிய பல்லுயி்ர்க்கும் அருளைப் பரவச் செய்து, சிறை அன பிறவிபோக்கும் - சிறைக்கூடம் போன்ற பிறவியினை நீக்கும், திருவறம் - (இறைவனருளிய) திருவறத்தில், மருவிச்சென்று - பொருந்தி நடந்து, புகழ்நிறை உலகம் காத்து -புகழ்நிறையும் உலகத்தைக் காத்தளித்து, நீடுவாழ்க-நீடுழிகாலம் வாழ்க, என்று நின்றார் - என்று அரசனுக்கு அவ்விளைஞர் ஆசி கூறி நின்றார். (எ-று.)]
1 பாடம். அறவி