Primary tabs
“புரவல கருதிற்றுண்டேல் அருளியல் செய்து செல்க ஆகுவதாக” என்றான்.
அருளியல், குறிப்பு மொழி; இனி, எண்ணியவாறு‘ என்னும் பொருளியல் உயர்வாகக் கூறினானுமாம். (61)
வேந்தன், கருணைக்குப் பாத்திரனாகி மீண்டும் வினவல்
(இ-ள்.) அன்னணம் அண்ணல்கூற - அவ்வாறு அண்ணலாகிய அபயருசி கூறலும், மன்னவன் - மாரிதத்தவரசன், அருளுடை மன்னத்தன் ஆகி - அருள் நிறைந்த மனமுடையவனாய், தன் கை வாளும் - தன்கையிலுள்ள வாளாயுதத்தையும், மனத்திடை மறனும் - மனத்திலுள்ள தீய நினைவையும், மாற்றி - ஒருங்கே நீக்கி, இனி என் - (மாக்கோழியின்பலியால் துன்புற்ற உங்களை விட வேறு சாட்சியம் இனி) என்ன இருக்கின்றது, எனக்கு நீயே இறைவன் - எனக்கு இனி நீயே உண்மையான தெய்வம், என-என்று கூறி, இறைஞ்சி நின்று - வணங்கி நின்று, குமர - இளைஞரே. நுங்கள் பவத்தொடு பரிவும் - நும் பழம்பிறவிகளின் வரலாற்றோடு நீவி்ர் எய்திய துன்பங்களையும், பன்னுக - எனக்கு உரைப்பீராக, என்றான் - என்றனன். (எ-று.)
இனி, இறைவன் நீயே எனக்கு என்றதனால், இனி, என்இறைவன் நீயே; சண்டமாரி அல்லள் என்ற பொருளும்தோன்றும். (62)