தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium


- 133 -

களை, சிந்தித்தல் மரபாதலின், ‘இனையன நினைவுறீஇ';என்றார்.  தனக்குரிய இராஜ்ஜியத்தைத் தன்புத்திரனுக்கே அளித்தலும், எம்மைப்போலவே சில காலம் அரசுபுரிந்துப்பின் துறவறமேற்  கொள் என்று  நீதி புகலுவதும் முறையாதலின்,  ‘யசோதரன்...  தலைவனாகென...  முடிகவித்து';  என்றார்.  ‘நிலமகள் தலைவன்';  என்றது பூமி தேவிக்கு நாயகனாகக்  கூறும் மரபு  நோக்கியாகும்.  கனை-செறிவு; நெருக்கம். புனை வளை-வளையலுக்கு அழகைத் தருகின்ற சந்திரமதி யெனலுமாம்.  மதிமதி-சந்திரமதி,மதி-சந்திரன்.  புத்திசேனன் என்று கூறு  மிடத்து, ‘திங்கள் விரவிய பெயரினாற்கு';  (சீவக.671)  என்று திருத்தக்கதேவரும் கூறியது  காண்க.  புலம்புதல் - தனித்துக்துயருழத்தல்.           (10)

அசோகன் துறவு

83.
குரைகழ லசோகன் மெய்க் குணதரற்  பணிந்
 
தரைசர்க ளைம்பதிற் றிருவர் தம்முடன
 
1உரைசெய லருந்தவத் துருவு கொண்டுபோய்
 
வரையுடை வனமது மருவி னானரோ.

(இ-ள்.) குரைகழல் அசோகன் - ஒலிக்கின்றவீர கண்டையணிந்த வேந்தனான அசோகன், மெய்குணதரன்பணிந்து-மெய்யொழுக்க முள்ள குணதரமுனிவரை வணங்கி (அறங் கேட்டு), அரைசர்கள் ஐம்பதிற்று  இருவர் தம்முடன்-உடன் வந்த அரசர்கள் நூற்றுவரோடும், உரை செயல் அருந்தவத்து உருவு கொண்டு - புகழ்ந்து கூறுதற் கரிய தவவேடம் கொண்டு, போய்-(சிறிது காலம்சங்கத்திலிருந்து பிறகு பிரிந்து)  சென்று,  வரையுடைவனமது மருவினா - மலைகள் செறிந்த வனத்தை நண்ணித்தவமியற்றனான்.

அசோகன், அரசர் நூற்றுவருடன் குணதரரென்றமுனிவரிடம் துறவு பூண்டு தவமியற்றினான் என்க.

 

1 உரைசெய வருந்தவத்

 



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:06:00(இந்திய நேரம்)