தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 135 -

யசோதரன்,  நிலமகளின் திலகம் போன்ற உஞ்சயினியிலிருந்து அரசர் பலரையும் தன் அடிப்படுத்திப் பேராசனானா னென்க.

இரு நிலம்-விசாலமான பூமி; வளமிக்க பூமியுமாம். சிறந்த நகரத்தை நிலமகளுக்குத் திலகம் எனக் கூறும் வழக்கினை சூளாமணி முதலியவற்றா லறியலாகும்.  அடிப்படுத்தல் - வணங்கச் செய்தல், குரு மேன்மையெனினுமாம். குவலயம்-நிலமாகிய வட்டம்.                (12)

மன்னனின் மனமாட்சி

84.
திருத்தகு குமரன் செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டு
 
மருத்தெறி கடலிற் பொங்கி மறுகிய மனத்த னாகின்றி
 
உருத்தெழு சினத்திற் சென்ற வுள்ளமெய் மொழியோடொ
 
அருத்திசெய் தருத்த காமத் தறத்திற மறத் துறந்தான்.

(இ-ள்.) திருத்தகு குமரன்-திருமகள்  தங்குதற்குத் தகுதிவாய்ந்த குமரனாகிய யசோதரன்,  செல்வச் செருக் கினால்-, நெருக்கப்பட்டு-அடர்ப்புண்டு, மருத்து  எறி கடலின்-புயற்காற்றினால் மோதப்பட்ட கடல் பொங்குவது போல, பொங்கி மறுகிய மனத்தனாகி-காமம் முதலிய உட்பகை ஆறினாலும் பொங்கிக் கலங்கிய மனமுடையவனாகி, உருத்து எழு சினத்திற் சென்ற-மிக்கெழுகின்ற கோபத்தின் பாற் பட்ட, உள்ளம் மெய் மொழியோடு ஒன்றிமனம்மெய் மொழிகளில் ஒன்றுபட்டு (நிற்க), அருத்த காமத்து அருத்தி -செய்து பொருளின்பங்களிலே வேட்கை மிகக் கொண்டு,  அறத்திறம்  அறத்துறந்தான் - அறத்தின் வகைகளை முற்றும் கைவிட்டொழுகுவானாயினான். (எ-று.)

செல்வச் செருக்குடைய யசோதரன்,  கலக்கத்தால் பொருளின்பங்களிலேயே  மயங்கி அவற்றிற்கு  காரணமாகிய அறத்தை அறவே  மறந்துழன்றன னென்க.

திருத்தகு குமரன் லக்ஷ்மிகடாக்ஷம் பொருந்தியவன்.பொருள் சேர் (த்திரு)க்கும்  பெருமிதத்தால்  ஏற்படும்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:06:20(இந்திய நேரம்)