Primary tabs
கமழ் அமளிதேம்ப - தேன்மணக்கும் படுக்கையும் அசைந்தொலிக்க, செறிந்தனர் - புணர்ந்து, திளைத்து விள்ளார்-காம இன்பத்தில் திளைத்து நீங்காதவர்களாயினர். (எ-று.)
மன்மதபாணங்களா வடிபட்ட இருவரும் ஒன்றுபட்டு அனுபவித்தனரென்க.
ஒன்றுபட்டமையையே, ‘ஒருவருள்புக்கு இருவரும் ஒருவராகி‘ என்றார். இதனை, ‘இருவரும் இறைவனுள்ளத் தொருவரா யினியாரானார்‘ (சூளா - 64) என்று கூறியதறிக. திளைத்தல் - அனுபவித்தல்; அழுந்தலுமாம். விள்ளல் - நீங்குதல். (18)
இதுவுமது.
(இ-ள்.) (யசோதரன்), மடம் கனிந்து இனிய நல்லாள்-இளமை நிரம்பப்பெற்று இனியளான அமிர்தமதியின், வனமுலைப்போகம் எல்லாம்-அழகிய முலைப்போக மனைத்தையும், அடங்கலன் அயர்ந்து - தணியாத வேட்கையோடு துய்த்து, தேன்வாய் அமிர்தமும் பருகி-இனிய அதரச்சுவையையும் பருகி, அம்பொற் படம் கடந்து அகன்ற அல்குல்-மிக அழகிய பாம்பின் படத்தையும் வென்று பரந்த அல்குலினையுடைய, பாவையே-அமிர்தமதியே, புணையதாக-தெப்பமாக, இன்பக்கடலினுள்-சிற்றின்பக் கடலினுள், இடங்கழித்து-வரம்பு இன்றி, ஒழிவு இல்-இடைவிடாது, மூழ்கினான்-அழுந்தினான். (எ-று.)
நல்லாள் போகத்தை ஒழிவின்றி நுகர்ந்தும், திருப்தி யின்றி மீட்டும் மீட்டும் நுகர்வதற்கு விரும்பினா னென்க.