தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 142 -

கடலைக்கடப்பதற்குக் காரணமானது தெப்பம்;  இவ்விடத்து  அமிர்தமதியாகிய  தெப்பம் காமக் கடலைக் கடப்பதற்கு உரியதாகின்றது.  மடம் - பெண்கள்  நாற்குணத்தொன்றெனினுமாம்.  நல்லாள் - நலனுடையாள்.  ‘இடங்கழிந்து‘ -வரம்புநீக்கி, எல்லையின்றி; ‘ இடங்கழிகாமமொடடங்கா னாகி‘ என்பது  ‘மணிமேகலை‘  18-11-9ல் கூறுதல்  காண்க.  பஞ்சேந்திரிய விஷயங்களை அனுபவித்துக் கழித்து எனினும் அமையும்.                 (19)

இருவரும் இன்பம் நுகர்ந்தபின் கண் உறங்கல்.

92.
இன்னரிச் சிலம்புந் தேனு  மெழில்வளை நிரையு  மார்ப்ப
 
பொன்னவிர் தாரோ டாரம் புணர்முலை பொருகு  பொங்க்
 
மன்னனு மடந்தை தானு மதனகோ  பத்தின் மாறாய்த்றே
 
தொன்னலந் தொலைய வுண்டார் துயில்கொண்ட விழிகளன்

(இ-ள்.) இன் அரி சிலம்பும் - இனிய ஒசையைத்தருகின்ற பரல்நிறைந்த சிலம்பும், தேனும் - (மாலைகளில்மொய்த்துள்ள)  வண்டுக் கூட்டமும், எழில்வளை  நிரையும் - அழகிய வளையல் வரிசையும்,  ஆர்ப்ப - ஒலிக்கும் படியாக பொன் அவிர் தாரோடு - பொன்னா லியற்றப்பட்டு  ஒளிரு கின்ற - மாலையோடு, ஆரம் - இரத்தினாஹாரமும்,  புணர்முலை பொருது  பொங்க - (அமிர்தமதியின்) இரண்டு தனங்களிலும் அழுந்தி எழும்படியாக, மன்னன் உம்மடத்தை தான் உம் - அரசனும் அரசியும்.  (ஆகிய  இருவரும்), மதன  கோபத்தின் மாறுஆய் - மன்மதனின் கோபத்திற்கு  மாறுபட்டு, தொல்நலம் தொலைய - கலவிக்கு முன்பு இருந்த (தங்கள்)  அழகு கெட, உண்டார் - இன்புற்றனர்,  விழிகள் அன்றே  துயில் கொண்ட - அவர்தம் விழிகளும் அப்போழுதே  துயின்றன.      (எ-று.)

சிலம்பு முதலியன ஆர்ப்ப ஆரமும் மாலையும் பொங்ககாமச் சுவையை உண்டு, அரசனும் அரசியும் துயின்றன ரென்க.  தொல்நலந்தொலைந்தது  காமன் கோபம் மாறுபடுதற்குச் காரணமாகும்.                      (20)




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:07:28(இந்திய நேரம்)