Primary tabs
பண்ணிசையைக் கேட்ட அரசி துயிலெழல்
(இ-ள்.) ஆயிடை -அச்சமயத்தில், அயல்-(அரண்மனைக்கு) அண்மையிலுள்ள, அத்தி கூடத்து - யானைச் சாலையில் (இருந்த ஒருவன்), எழுந்து - நித்திரை விட்டெழுந்து, அமிர்தம் ஊற -இனிமை மிக, ஓர் கீதம் - ஒப்பற்ற கானத்தினொலி, சேயிடைச் சென்று செவி புகவிடுத்தலோடும் -
தொலையில் சென்று அங்குள்ளார் காதிலும் கேட்குமாறு பாடியவுடன், வேய் இடை தோளி - பசிய மூங்கில் ஒப்பாகாது பின்னிடைவதற்குக் காரணமான தோள்களையுடைய அமிர்தமதி, மெல்ல விழித்தனள்-உறக்கத்தினின்றும் மெல்ல விழித்து, வியந்து --, நோக்கா - (மனத்தால்) நோக்கி, தீயிடை மெழுகின் - (அவ்விசைகாரணமாக) அனலிற்பட்ட மெழுகினைப்போல , நைந்த சிந்தையின் தளர்ந்த சிந்தையை உடையவளாகி, உருகினாள் - இளகிக் கரைந்தாள். (எ-று.)
யானைச்சாலையினின்றும் வெளிவந்த கீதத்தைக் கேட்ட அரசி, கண்விழித்து மன நிறை தவறி உருகினா ளென்க.
ஆயிடை - செய்யுளில் சுட்டு நீண்டது. அத்திகூடத்தயல் எனலுமாம். (21)
அரசி மதிமயங்குதல்
பண்ணினுக் கொழுகு நேஞ்சிற் பாவையிப் பண்கொள் செவ்
அண்ணலுக் கமிர்த மாய வரிவையர்க் குரிய போகம் [வாய்
விண்ணினுக் குளதென் றெண்ணி வெய்துயிர்த் துய்தல் செல்
மண்ணினுக் கரசன் றேவி மதிமயக் குற்றிருந் தாள். 94. [லாள்