தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 162 -
பட்டு, வெகுளியால்-வெருட்சியால், விம்மிய மிடற்றளாகி - விம்மிய கண்டத்தை உடையவளாய், தெருள்கலாள் - தெளிவற்றவளாய்,  உரையும் ஆடாள்-பேச்சும் அற்றவளாய் மூர்ச்சித்து, சிறிதுபோது அசைய-சில  நிமிஷம் தளர்ந்திருக்க, மருளி-மருளுடையோனாகிய அப் பாகன், மயங்கி-ப்ரமித்து, மாதர் மலரடி சென்னிவைத்தான்- அவ்வமிர்தமதியின் மலர்போலும்   பாதத்தில்  தன் சிரசை வைத்து வணங்கினான்.  (எ-று.)
 
மிதிப்புண்ட அரசி மூர்ச்சித்துச் சிறிதுநேரம்  தளர்வுற்றிருக்க, பாகன் அவளடியில் வணங்கினானென்க.
 
அடர்த்தல் - தாக்கல்.  சந்திரன் சூரியன் முதலியவற்றைக் கடவுளாகக் கூறும் வழக்குப்பற்றி,  ‘மதிக்கடவுள்‘  என்றார்.  ‘கனைகதிர்க் கடவுள்‘  (சீவக. 1943) என்றது அறிக.  வெருளி-வெருட்சி.  உரத்துக் கதறினால்தன் மறை புலப்படுமென்றஞ்சி  மெதுவாக  விம்மினா ளாதலின்,  ‘விம்மிய  மிடற்றளாகிய‘ என்றார். தெருள்-அறிவு,  மருள்-மயக்கம்.  தான், அசை. இப்பாட்டின் கருத்துக்களை,
 

“சமஸ்கிருத சுலோகம் இல்லை”


என்று வாதிராஜர் கூறிய (115,16-ஆவது) சுலோகங்களிலும் அறியலாகும்.     (42)

அரசி மூர்ச்சை தெளிந்து காலம் கடந்ததற்குக்காரணம் கூறல்

115.
தையலாள் மெல்லத்1 தேறிச் சாரனை மகிழ்ந்து  நோக்கி
 
வெய்யநீ முனிவு செல்லல் மேதினிக் கிறைவன் றன்னேர்
 
விடையவா சனத்தி னும்ப ரரசவை யிருந்து கண்டாய்  [றாள்.
 
வெய்யபா வங்கள்2 செய்தேன் விளம்பலன் விளைந்த  தென்

 

1 மெள்ள.

2 பாதகங்கள்

 




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:10:43(இந்திய நேரம்)