Primary tabs
ஏறே, ஐய, தோன்றல் என்பன அன்புபற்றி வந்த விளிகள். ‘மணிமருளுருவம்'; என்றமையின், மணி என்பதுஈண்டு (சிவந்த) பதுமராகமணியைக் குறிக்கும். ‘நெஞ்சம் கடுத்தது காட்டு முகம'; என்பதனால் இவன் முகவாட்டமே மனவாட்டத்தை உணர்த்திற்றுஆகலின், ‘இது என்கொல்'; என்றாள். ‘துணியலென்'; என்பது, தன்மை ஒருமை வினைமுற்று. (55)
அரசன் அமிர்தமதியின் செய்கையைத் தன் தாய்க்கு
உள்ளுறையாகத் தெரிவித்தல்.
(இ-ள்.) இறைவி-அரசியே, விண்ணிடை விளங்கும்-வானில் ஒளிர்கின்ற, காந்தி மிகு கதிர் - ஒளிமிக்க கிரணங்கள், மதியம் தீர்ந்து - (காந்தி மிளிர்வதற்குக் காரணமாகிய) சந்திரனைவிட்டு நீங்கி, மழுங்க-(தன் ஒளியும்)மழுங்க, மண்ணிடைச் சென்று-இம் மண்ணுலகத்திற்குப்போந்து, மறை யிருள் பகுதி சேர - (எல்லாவற்றையும்) மறைக்கின்ற இருளின் பாகத்தைச் சேர, கங்குல் - இரவில், கனவினில் - சொப்பனத்தில், கண்ணிடை கண்டது உண்டு -(என்) கண்களால் கண்டேன். அஃது - அக்காட்சி, எண் உடை -ஆராய்ச்சியைப் பொருந்தியுள்ள, உள்ளந் தன்னுள் - என்மனத்தகத்தே, ஈர்ந்திடுகின்றது - துன்புறுத்து கின்றது. என்றான் - என்று கூறினான். (எ-று.)
சந்திரகாந்தி சந்திரனை விட்டு நீங்கிப் பூமியில் இருளைச் சேரக் கனவிற் கண்டது உண்டு. அது என் உள்ளத்தை ஈர்ந்திடுகின்றது என்றானென்க.
ஈண்டு மன்னன் தன்னை மதியமாகவும் மனைவியைக்காந்திமிகு திராகவும் அட்டபங்கனை மறையிருட் பகுதி