தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium




- 225 -

யசோதரன்,  விஷத்தால் இறந்த பின், ‘யான் செய்தது யாதோ, இனிச் செய்வதுயாதோ!' என்று வருந்தினானென்க.

  அறியாமையை உடையளாதலின் அமிர்தமதியைப் ‘பேதை மாதர' என்றான்.  விஷம் உண் டிறந்தநாள் தொட்டு ஆடாகப் பிறந்ததுவரை உள்ள இடைக்காலத்தை, ‘இடை' என்றான். யசோதரனாகிய பிறவி தவிர மயில் முதலிய பிறவிகளை  அறிந்தில னாதலின், ‘யாது செய்தனனோ' என்றா னென்க.   (43)

சந்திரமதியாகிய பெண்யாடு (5வது) எருமையாய்ப் பிறத்தல்

198. 
இனைய வாகிய சிந்தைக ளெண்ணிலா
 
வினையி னாகிய வெந்துயர் தந்திடத்
 
தனையன் மாளிகை தன்னுள நோகமுன்
 
சினைகொண் டாடுயிர் சென்று பிறந்ததே.

  (இ-ள்.) இனைய ஆகிய - இத்தன்மைய வாய, எண்இலா - கணக்கில்லாத, சிந்தைகள் - சிந்தனைகள், வினையின் ஆகிய- தீவினையினாலாகிய, வெந்துயர் தந்திட -கடுந்துயரைத் தந்து வருத்த, தனையன் மாளிகை -தன் மகனான யசோமதியின் மாளிகையில், தன் உளம் நோக - (யசோதரனாகிய ஆடு) தன் மனம் நொந்திருக்க, முன் சினை கொண்ட ஆடு -முன் (யசோதரனாகிய ஆட்டை) கருவில் தரித்திருந்த பெண்யாடு, உயிர் சென்று பிறந்தது - உயிர் போய்(க் கலிங்கதேசத்தில் எருமையாய்)ப் பிறந்தது.  (எ-று.)

யசோதரனாகிய ஆடு இங்ஙனம் வருந்தாநிற்க, தாய் ஆடு இறந்து பிறந்ததென்க. (பிறந்த செய்தி வரும் பாட்டில் கூறுகின்றார்.)

யசோ, 191-ஆவது கவிமுதல் கூறியவற்றைத் தொகுத்து, ‘இனையவாகிய சிந்தைகள்' என்றார்.  பழம் பிறப்புணர்வினால் அரசவின்பம் முதலியவற்றை இழந்ததை அறிந்து வருந்தியதனை, ‘வெந்துயர்' என்றார்.  தந்திட ஒருசொல்.  தனையன் - மகன்.சினை - கருப்பம். சினை




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:21:01(இந்திய நேரம்)