Primary tabs
(இ-ள்.) என்று கண்டு - என்றிவ்வாறு நினைத்து (அரசியைக்) கண்டு, மொறு மொறுத்து நின்று - மொறுமொறு என்று சத்தமிட்டுக்கொண்டுஇருந்து, என்செயும் - என்ன செய்யும், (அதனால் அவ்யாடு), நெஞ்சம் அது உள்சுட - (அரசியின் செயல்) தன் மனத்தினுள் வெதுப்ப, நின்றது - (அவ்விடத்தே) நின்றது; அன்று - அப்பொழுதே, தேவி அலைப்ப - அரசி கொல்விக்க, அழிந்து - இறந்து, உயிர் - அதன் உயிர், அம்மயிடத்தொடு -முன் இறந்த அந்த எருமையோடு, செல்கதி சென்றது-தான்போய்ப் பிறத்தற்குரிய கதியிற் சென்றது. (எ-று.)
தகர் இறந்து எருமையுடன் வேறுகதி யடைந்ததென்க.
மொறு மொறுத்தல், ஒலிக்குறிப்பு. மொறுமொறுக்கலாமே தவிர வேறு என்ன செய்ய முடியும் என்பதற்கு, ‘என் செயும்‘ என்றார். (62)
எருமையும் ஆடும் (6) கோழிகளாய்ப் பிறத்தல்
(இ-ள்.) (அவை), மற்று -மீண்டும், அம் மாநகரதுத்து - அவ்வுஞ்சயினி மா நகரத்தின், மருங்கினில் - பக்கத்தேயுள்ள. சிற்றில் பல்சனஞ்சேர் புறச்சேரியில் - சிறுவீடுகளில் பல மக்கள் குழுமி வாழும் புறச்சேரியில், உற்று - (கோழியின் கருவில்) அடைந்து, வாரணப் புள் உருவு ஆயின - கோழிகளாயின (அவற்றை), வெற்றிவேலவன்-வெற்றி தரும் வேல்வீரனாகிய யசோமதி, கண்டு - (வினையின் தொடர்பால்) கண்டு, விரும்பினான் - --. (எ-று.)
எருமையும் ஆடுமாகிய உயிர்கள் அந்நகரப் புறச்சேரியில் கோழிகளாயின; அவ்விரண்டையும் யசோமதி கண்டுவிரும்பினானென்க. பறைச்சேரி என்றும் பாடம். (63)