Primary tabs
(இ-ள்.) இறைவனே -, மற்றொரு கள்வன் தன்னை - மற்றுமொரு திருடனை, வதைசெய்யும் முன்னும் பின்னும் - கொல்வதற்கு முன்னரும் கொன்ற பின்னரும், இற்று எனநிறை செய்திட்டும் - அவன் உடலின் எடை இவ்வளவு என்று நிறை செய்து பார்த்தும், பேதம் காணேன் - (எடையில் சிறிதளவும்) வேறுபாடு காணவில்லை: ஒருவனை - மறறொரு கள்வனை, உற்றது ஓர்குழியில் -பூமியின் கீழ்ப்பொருந்தியதொரு குழியில், மூடி சில நாள் வைத்தும்-உயிருடன் மூடிச் சில நாள் வைத்திருந்தும், அவன் உயிர்போயிட்ட வழி - அவனது உயிர் சென்ற வழி, ஒன்றும் - சிறிதும், கண்டிலேன் - யான் காணவில்லை. (எ-று.)
ஒருவிதத்திலும் உயிரைக் காணவில்லை யென்றானென்க.
‘உயிருக்கு எடை உண்டேல், உயிருள்ள போதும் இறந்தவுடனேயும் பேதம் காணவேண்டும்‘, ‘உடலில் உயிர் உண்டேல் பூமியில் புதைத்தவன் உயிர் சென்ற வழி காணப்படல் வேண்டும்‘ அங்ஙனமின்மையால் உயிர் என்ப தொன்று இல்லை என்று கொண்டான். காற்று நுழையாதவாறு புதைத்து வைத்தலின் ‘உற்றதோர் குழி‘ என்றான். பூமியில் (புதைத்து) அரக்கினால் மெழுகியதென்கிறார் வடமொழிக் காவ்யத்தில். (10)
முனிவர் தளவரன்ஐயத்தைப் போக்குதல்.
1 பவ்யனே.
2 ஐயனே.
3 மெரிய
4 யுணர.