Primary tabs
(இ-ள்.) காட்டம் தன்னை - காய்ந்த விறகினை, பைய - மெல்ல, பல பின்னம் செய்திட்ட அன்று -பல துண்டுகளாகச் செய்தபோது, வெய்எரி - (அதனுள்) வெப்பமாகிய நெருப்பினை, கண்டது உண்டோ - எவரேனும் கண்டது உண்டோ? விறகொடு விறகை ஊன்ற - அவ்விறகுத்துண்டுகளையே ஒன்றோடொன்று ஊன்றிக்கடைய, அங்கி தோன்றி - (அவற்றில்) நெருப்புஉண்டாகி, அதனையும் - அவ்விறகினையும், ஐ என - வேகமாக, எரிக்கல் உற்றது-எரிக்கலாயிற்று, இவ்வகை காணலாகும் - (உயிரையும்) இவ்வகையாகவே அறிவால் காணலாகும், என்று நீ உணர்தல் வேண்டும் - என்றிவ்வாறு நீ உணர்ந்துகொள்ள வேண்டும்.
விறகிலுள்ள நெருப்புப்போல, உயிர் உடலில் அடங்கியுளது என்று கருதுக வென்றாரென்க.
பவ்யனே என்றும் பாடம். பவ்யன்: ஜிநதருமத்தை மேற்கொள்பவன்: இவன் ஆசன்னபவ்யன். காஷ்டம் - வடசொல்: தீக்கடைகோல் (அரணி). ஐஎன - சடக்கென: சரேலென்று, ஆதிகாலத்தில் அத்தி முதலியவற்றின் கட்டையைக் கடைந்து தீ எடுத்தனர். இன்றும் யாகஞ்செய்வோர் இவ்வாறு கடைந்தெடுத்த தீயையே உபயோகிப்பர். துண்டித்த கட்டைகளில் நெருப்புக் காணப்படவில்லை. ஆயின், இரண்டு கட்டைகளைக் கடைந்தவிடத்துத் தீக் காணப்படுகிறது: ஆதலின், அத் தீ அக்கட்டைகளில்காணப்படாவிட்டாலும் முன்னரே அமைந்திருந்தது அறியப்படும்: அதுபோல, உடம்பினைச் சோதித்தபோது உயிர் காணப்படாவிடினும் அவ்வுடம்பினுள் முன்னர் இருந்தது என்பது செயல் முதலியவற்றால் அறிதலாகும் என்று முனிவர் தெளிவித்தார். (11)
இதுவும் அது
1 நீக்கிப்