Primary tabs
எங்கட்கு - அறிவிலிகளாகிய எங்களுக்கு, பெரிது அரிது - மிக அரிது ; ஏக சித்தத்தர் ஆய - ஒரு வழிப்பட்ட மனத்தராய்த் தியானத்திலமரும், இறைவர்கட்கு - (தங்களைப் போன்ற) ஞானிகளுக்கு, எளிதுபோலும் - மிக எளிதாகலாம்: (ஆதலின்), போக சித்தத்தோடு ஒன்றி - இன்பம் நுகரும் மனத்தோடு கூடி, பொறிவழிபடரும் நீரார்க்கு-ஐம்பொறிகளின் வழியே செல்லும் தன்மையையுடையவர்களுக்கு, ஆகும் உறுதிக்கு ஏது- ஆகும் நன்மைக்கு உரியமார்க்கத்தை, தெருள அருளுக - விளங்க உரைத்தருள்வீராக, என்றான் - என்று சண்டகருமன் வேண்டினான். (எ-று.)
அடியேனுக்கு, அறத்தை மேற்கொள்ளும் எளிய முறையை அருளுக என்றானென்க.
ஹேது - ஏது என்றாயிற்று. ஏது - காரணம்: இதனால் இது ஆமெனல். ஏக சித்தத்தரைப்போல, போக சித்தத்தராகிய என்போன்றாரும் உண்மைநெறியடைய ஒர் எளியவழியை அருளுக என்று தளவரன் வேண்டினானென்க. (14)
(இ-ள்.) அற்றம்இல்- குற்றமில்லாத, அரும்தகை - அரிய தகவினையுடைய, அறிவு காட்சி ஒழுக்கம் மூன்றும் பெற்றனர் - நல்லறிவு நற்காட்சி நல்லொழுக்கம் என்னும் ரத்னத்ரயத்தையும் அடைந்தவர்களாய், புரிந்து பேணி-விரும்பிஆதரித்து, பெருங்குணத்து ஒழுகுவாருக்கு-(தர்சன விசுத்தி காட்சியின் தூயதன்மை) முதலாகிய பதினாறு பாவனை முதலிய, பெருங்குணத்தில் தவறின்றி ஒழுகும் சான்றோர்க்கு, முறைமை - முறையாக, உம்பர் இன்பமும் - மறுமையில் தேவேந்திர பதவியும், உலகு இதற்கு இறைமை தான்உம் - மீண்டும் இவ்வுலகிற்கு அரசனாம் பதவியும், உற்றிடும் -