தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium




- 250 -
 
மையலுற் றழுந்தி நான்கு கதிகளுட் கெழுமிச் செல்வர்
 
ஐயமில் சாட்சி ஞானத் தொழுக்கத்தோ ரறிவ தாகும்.

(இ-ள்.) சீவன் இயல்புதான் - உயிரின் தன்மை, இவ்வகையாகும்  - (மேலே கூறிய) இவ்வகையாகும், இயல்புவேறு ஆம் - அவ்வுயிரின் இயல்பினின்றும் வேறாகிய, வெய்ய தீ வினைகளாலே - கொடிய இருவினைகளினாலே, வெருவுறு துயரின் மூழ்கி - அஞ்சத்தக்க துன்பத்திலாழ்ந்து, மையல் உற்று  - மயக்கமுற்று, அழுந்தி - பிறவிச் சுழற்சியில் அழுந்தி, நான்கு கதிகளுள் --, கெழுமிச் செல்வர் - பொருந்திச் சுழல்வர்: (இது) ஐயம் இல் காட்சி ஞானத்து ஒழுக்கத்தோர் - சந்தேஹம் *முதலிய குற்றங்களில் நீங்கின நற்காட்சி நல்லறிவு நல்லொழுக்கம் என்ற மூன்றையும் உடைய சான்றோரே, அறிவதாகும் - தெளிய அறிவதாகும்.

உயிரின் இயற்கை, கடையிலா அறிவு முதலிய தன்மையதே;  அதற்கு மாறாகிய செயற்கையாலாகிய நல்வினை தீவினைகளினால் பற்றப்பட்டு நர சுர நாரக திர்யக் என்னும் நாற்கதியிற் சுழன்று வருந்துவது மாற்றுயிர் என்பதாம்: இவ்விருவகை உயிர்களையும் அறிபவர் மும்மணி நிறைந்த சான்றோரே யென்றா ரென்க.

நான்கு கதியும் கூறியதனால், ‘வெய்யதீவினை’ என்பது, நல்வினை தீவினை இரண்டையும் குறிக்கும்.  வெய்ய - விரும்புதற்குரிய: ‘வெய்யநெய’ (தக்கயாகப்) ஈண்டு நல்வினை, அதர்மானுபந்தி புண்யம். யசோ. 4.உரை பார்க்க.  தான், அசையெனவுமாம்.           (13)

233. 
ஆகமத் தடிக ளெங்கட் கதுபெரி தரிது கண்டீர்
 
ஏகசித் தத்த ராய விறைவர்கட் கெளிது போலும்
 
போகசித் தத்தோ டொன்றிப் பொறிவழிப் படரு நீரார்க்
 
காகுமற் றுறுதிக் கேது அருளுக தெருள வென்றான்.

   (இ-ள்.) ஆகமத்து அடிகள் - பரமாகமமுணர்ந்த அடிகளே, அது - சீவனியல்பினை அறிதல் முதலாகிய அது,

 

* யசோ. பக்கம் 88.

 



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:25:06(இந்திய நேரம்)