தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium




- 262 -

தன்னை - மாவினாற் செய்த அழகிய கோழி வடிவத்தை, கொல் நவில் வாளில் - கொலையிற் பயின்ற வாளினால், கொன்ற கொடுமையில்-(பலியாகக்) கொலை செய்த தீவினைப்பயனால், பின் அவர் - பின்பு அவர்கள், பிறவிதோறும் -ஒவ்வொரு பிறவியிலும், பெற்றன - அடைந்தனவாகிய, கடிய துன்பம் - கொடிய துன்பங்களை,  பேசல் ஆமோ -இவ்வளவென்று அளவிட்டுக் கூறமுடியுமா? முடியாதுஎன்றபடி.

மாக்கோழியைப் பலியிட்ட யசோதரன், அதனால் பல பிறவியில் தோன்றி உற்ற துன்பம் உரைக்கவொண்ணா தென்றாரென்க.

தொடர்ச்சியாய் அறங் கூறிவந்தவர் நடந்த வரலாறு ஒன்றை உதாரணமாகக் கூறவேண்டி, ‘இன்னுமீதையகேட்க’ என்றார்.  மேலைச் செய்யுளில், ‘கொற்றவரேனும் உய்யார்’  என்றதை வலியுறுத்துதற்கும்,  இவ்விவரத்தினை எதிரிலுள்ள கோழிகளும் உணர்தற்கும், ‘யசோமதிதந்தை...துன்பம்’ என்றார்.  கொலை செய்தவரேயன்றி, செய்வித்தவரும் இன்னலுறுவார் என்பதை விளக்க, ‘அன்னையோடும’  என்றார். வீரரையேயன்றி ஏனையோரைக் கொலைபுரிதல் இல்லாத தன்னுடைய வெற்றிவாளால் மாக்கோழியைக் கொன்றான் என்னும்  இழிவு  தோன்ற, ‘மாவினற்கோழி தன்னைக் கொன்னவில் வாளிற் கொன்ற‘ என்றார்.  (24)

244. 
வீங்கிய வினைக டம்மால் வெருவரத்1 தக்க துன்பந்
 
தாங்கினர் பிறந்தி றந்து தளர்ந்தனர் விலங்கிற் செல்வார்
 
ஆங்கவர் தாங்கள் கண்டாய் அருவினை துரப்ப வந்தார்
 
ஈங்குநின் அயலக்2 கூட்டி லிருந்த கோழிகளு மென்றான்.

(இ-ள்.) வீங்கிய வினைகள் தம்மால் - பெருகியவினைகளால், வருவரத்தக்க துன்பம் - (பிறர்) நடுங்கத்தக்கதுன்பங்களை, தாங்கினர் - அடைதவர்களாய்,  விலங்கில்

 

1 வெருவுறத்,

2 அயலார்க்

 




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:27:05(இந்திய நேரம்)