தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium




- 263 -

பிறந்து இறந்து - திர்யக் கதியில் பல பிறப்புப் பிறந்துஇறந்து, தளர்ந்தனர் செல்வார் - (பிறவிதோறும்) வருந்திச்செல்பவர்களாகி, அருவினை துரப்ப வந்தார்- (மீண்டும்)அத்தீவினை செலுத்த இப்பிறவியில் பிறந்தனர்: ஈங்கு - இவ்விடத்தில், நின்அயல் - நின்பக்கத்தேயுள்ள, அக்கூட்டில்இருந்த - அக்கூட்டில் அடைக்கப்பட்டுள்ள, கோழிகளும் -இரண்டு கோழிகளும், அவர் தாம் கண்டாய் - (மன்னனும்தாயுமாகிய) அவ்விருவர்களேயாவர், என்றான் - --(எ-று..)

   யசோதரனும் தாயுமே இக்கோழிகளென்றாரென்க.

வீங்கிய - பெருகிய (யசோ. 52) காணும் பிறவுயிர்களுக்கு வெறுப்பும் அச்சமும் தோன்றுவதனால்.  ‘வெருவரத்தக்க துன்பம’ என்றார்.  பறவைகளும் விலங்கினத்தன வாதலின், ‘விலங்கிற் செல்வார’ என்றார்.  யசோ. 20. காண்க. ஆங்கு, அசை: இனி அத்தகைய என்றும்பொருள் கூறலாம்.  கண்டாய் - முன்னிலையசையுமாம்.

245. 
உயிரவ ணில்லை யேனு முயிர்க்கொலை நினைப்பி னாலிம்
 
மயரிகள் பிறவி தோறும் வருந்திய வருத்தங் கண்டால்
 
உயிரினி லருளொன் றின்றி யுவந்தனர் கொன்று சென்றார்
 
செயிர்தரு நரகி னல்லாற் செல்லிட மில்லை யென்றான்.

(இ-ள்.) உயிர் அவண் இல்லை ஏனும் - மாவாற் செய்த கோழியில் உயிர் இல்லையாயினும், உயிர்க்கொலைநினைப்பினால் - உயிர்ப்பொருளைக் கொல்கின்றோமென்னும்எண்ணத்தினால், இம்மயரிகள் - இவ்வறிவிலிகள், பிறவி தோறும் - ஒவ்வொரு பிறவியிலும், வருந்திய வருத்தம்கண்டால் - அடைந்த துன்பங்களை  அறிவோமாயின்,உயிரினில் - உயிர்களிடத்தே, அருள் ஒன்று  இன்றி - அருள் சிறிதுமின்றி, உவந்தனர் கொன்று  சென்றார் - உவகையோடு கொலைபுரிந்து தம் வாழ்நாளைச் கடந்தவர்,செல் இடம் - மறுமையில் புகுமிடம், செயிர் தரும் நரகின்அல்லால் இல்லை - வருத்ததைத் தருகின்ற  (வருத்துகின்ற) நரகமல்லது வேறு (கதி) இல்லை என்றான்.  என்று (முனிவர்) கூறினார்.  (எ-று..)




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:27:15(இந்திய நேரம்)