Primary tabs
பாபம் செய்தவர்க்குப் புகலிடம் நரகமல்லது வேறு இல்லை யென்றாரென்க.
‘உயிர்ப்பொருள் வடிவுகோறல் உயிர்க்கொலைபோலும்‘என்று மேலே கூறியிருப்பது (38) காண்க. உவந்தனர், முற்றெச்சம். ஈங்கு உவத்தல் - (கொலைத்தொழிலில்) ஆனந்தம்: ரௌத்ரத்யானத்தின் பிரிவாகிய ஹிம்ஸாநந்தம். யசோ.147. உரை காண்க. (26)
(இ-ள்.) அவன் இனைய கூற - அகம்பன முனிவர்இவற்றைக்கூற, மனம் நனிகலங்கி வாடி - (தளவரன்) மனம்மிகக் கலங்கிச் சோர்ந்து, செற்றமும் சினமும் நீக்கி -(அறம் மேற்கொள்ளும் முறைப்படி) செற்றத்தையும், சினத்தையும் விலக்கி, திரு அறம் தெளிவு காதல் பற்றினன் - திருவறத்தின் உண்மையில் அன்புகொண்டு, முன்னம்பகர்ந்தன - (அவரால்) முன் கூறப்பட்டனவாகிய, வதங்கள்அனைத்தும் - விரதங்களையெல்லாம், கொண்டு - (அம்முனிவரிடமே) கைக்கொண்டு, அடிகள் - அடிகளே ! நும்மால் - தங்களால், பெரும் பயன்பெற்றனன் - மிக்க நன்மையைஅடைந்தேன், என்று போந்தான் - என்று விடைபெற்றுமீண்டான். (எ-று.)
தளவரன், நற்காட்சியுடன் விரதங்களையும் ஏற்றுச் சென்றானென்க.
தன் இழிதொழிலின் பொல்லாங்கைக் கருதி, மனங்கலங்கி உடல்மெலிவடைந்தன னாதலின், ‘மனநனி கலங்கிவாடி‘ என்றார். பிறவி முதலியவற்றால் தாழ்ந்த ஜாதியினரென்று கூறப்படும் எத்தகையோரும் இறைவனருளியநற்காட்சி முதலியன மேற்கொள்ளலா மாதலின், ‘செற்றமும்... கொண்டு‘ என்றார். ‘பறையன் மகனெனினுங்
1 முன்னர்.