Primary tabs
(இ-ள்.) நிலைஇலா உடம்பின் வாழ்க்கை - நிலையில்லாத உடலோடுகூடி வாழும் வாழ்க்கையை, நெடிது உடன் நிறுவ என்று - நீண்டநாள் நிலைத்திருக்கச் செய்ய எண்ணி, இக்கொலையினால் - இக்கொலைத்தொழிலேயே, முயன்று - (வேண்டிய) முயற்சியைச் செய்து, வாழும் - --, கொற்றவர் ஏனும் - அரசராயினும், சில பகல் அன்றி - சில நாட்கள் வாழ்ந்தனரேயன்றி, முற்றநின்றார் - முடிய நீடித்து வாழ்ந்தவர், சிலர் இவண் இல்லை - சிலர் தாமும் இவ்விடத்து இல்லை, கண்டாய் - (இதனை நீயும்) அறிந்திருக்கிறாய், (அந்தக் கொலைத்தொழிலால் வந்த தீவினையினால்) அலைதரும் பிறவி முந்நீர் - துன்பந்தரும் பிறவிக் கடலில், அனந்தம் காலம் - நெடுங்காலம், அழுந்துவர் - மூழ்கி (முக்தியென்னும் கரை காணாது) வருந்துவர். (எ-று..)
வாழ்க்கை நிலையாமையும், கொலையால் வருந் துன்பமும் எடுத்தோதினாரென்க.
மக்களுள் மேன்மையுடைய அரசனேயாயினும் நெடுங்காலம் வாழ்ந்திருக்கவில்லை யென்றார். சில பகல் - சின்னாள்; இரண்டொருநாள். ‘இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றமே‘ என்றார், சிந்தாமணியாரும். சிலரும் என்பதில் உம்மைவிகாரம். பிறவி முந்நீர், உருவகம்: பிறவியை கடல் என்றமையின் உயிர்களை, 'அழுந்துவர்' என்றார். (23)
(இ-ள்.) ஐய - ஐயனே, இன்னும் ஈது கேட்க - இன்னும் இது ஒன்றை இதற்குச் சான்றாகக் கேட்பாயாக, இசோமதி தந்தையாய மன்னவன் - (இப்போது அரசனாயிருக்கும்) யசோமதியின் தகப்பனாய (யசோதர) அரசன், அன்னையோடு - தாயாகிய சந்திரமதியுடன், மாவின் நல்கோழி
1 யசோமதி.
2 மாவினிற்.