Primary tabs
அருளும் முனிவும் இலராகிய அடிகளை வணங்கினார் தேவேந்திரரும், வணங்காம லிகழ்ந்தார் நரகரும் ஆவரென்க.
முனிவர் விருப்பும் வெறுப்பும் அற்றவராதலின் அவற்றான் ஆகும் அருளும் முனிவும் இலர் என்று கூறினான். நிழல், தம்மிட மடைந்தார்க்குத் தட்பம் நல்கவேண்டும் என்னும் எண்ணம் உடையதன்றாயும் வெப்பம் நீக்கித் தட்பம் எய்துவித்தலின், முனிவரனுக்கு அஃது உவமையாகக் கூறப்பட்டது: அவ்வாறே முனிவு இலர் என்பதற்கு என்பிலதனைக் காயும் வெயில்போல முனிவு இல்லாதவர் என்று கூறிக்கொள்க. முனிவர்களை அடைபவரும் இகழ்பவரும், அவர் செயலாலன்றி, தஞ்செயலாலேயே இன்பமும் துன்பமும் எய்துவர். ‘இம்முனிவர் விருப்பற்றவராயினும் சகல வுயிர்களிடத்தும் அநுக்ரகஞ் செய்கிறார்: கோபமில்லாதவராயினும் விஷய நிக்ரஹத்தின் பொருட்டு(க்கோபமுடையவராய்) ஆகிறார் என்று வடமொழி யசோதரசரிதத்தில்,
(4-42ல்) என்று உள்ள கருத்து ஒருவாறு இச்செய்யுளிற் கூறப்பட்டுளது. ஆகலின், ‘அடைந்த நிழல்போல் (சகலருக்கும்) அருளும் (விஷய நிக்ரஹத்தில்) முனிவும் உளர்‘என்று பாடமிருப்பின் சிறக்கும். (44)
(இ-ள்.) தாரோய் - பூமாலையுடைய அரசனே! அந்தரம் இகந்தருள் தவத்து அரசர் - வேற்றுமைகளைக் கடந்தருளிய தவத்தரசரான முனிவரர், இந்திரர்கள் வந்து அடிபணிந்து - தேவேந்திரர்கள் வந்து திருவடி வணங்கி, அருளுக எனினும் - அருள்செய்க என்று வேண்டினாலும், நின் அனர்கள் - உன்னைப்போன்றவர்கள், நிந்தையுடன் வெந் துயர்கள் செயினும் - பழித்தலோடு கொடிய துன்பங்களைச் செய்தாலும், தம் தம்