தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 280 -

வினையென்று - அவ்விருவகை இன்ப துன்பங்களுக்குக் காரணம் தாம் தாம் செய்தவினையே யாகுமென்று கருதி,  நமர் பிறர் எனவும் நினையார்-பணிந்தாரை நம்மவர் என்றும் துன்பஞ் செய்தாரைப்பகைவர் என்றும் நினைக்கமாட்டார்கள்.  (எ-று.)

முனிவர்கள் விருப்பு வெறுப்பு அற்றவரென்றானென்க.

கடவுள் தன்மை யடைந்தாரையும், அடையும் பக்குவமுள்ள முனிவரர்களையும் இந்திரர் வணங்குதல் மரபாதலின், ‘இந்திரர்... எனினும்‘ என்றார்.  ஸ்ரீபுராணம்முதலியவற்றிலும் இவ் விவரம் அறியலாம்.  தம் நல்வினைதீவினைக் கேற்பப் பிறர் பரவுதலும் ஒறுத்தலும் செய்வாராதலின் அவற்றிற்குக் காரணம் தம் வினையே யென்றுகொண்டு மகிழ்தலும் இகழ்தலும் இன்றி நிற்றல் முனிவர்க்கியல்பு.  “வாய்ச்சிவா யுறுத்தி மாந்தர் மயிர்தொறுஞ்செத்தினாலும், பூச்சுறு சாந்தமேந்திப் புகழ்ந்தடி பணிந்தபோதுந், தூக்கியிவிரண்டு நோக்கித் தொல்வினை யென்றுதேறி, நாச்செறு பராவுங் கொள்ளார் நமர்பிறரென்றுமுள்ளார்.” (சீவக. 2825.) என்னுஞ் செய்யுளைக் காண்க. சிந்தையுடன் என்றும் பாடம்.    (45)

265. 
இவ்வுலகி னெவ்வுயிரு மெம்முயிரி னேரென்
 
றவ்விய மகன்றருள்சு ரந்துயிர் வளர்க்குஞ்
 
செவ்விமையி னின்றவர்தி ருந்தடி பணிந்துன்
 
வெவ்வினை கடந்துயிர் விளங்கு  விறல்வேலோய்.

   (இ-ள்.) விறல்வேலோய் - வெற்றி வேலையுடையவேந்தே, இவ்வுலகின் எவ்வுயிரும் - இவ்வுலகத்தில் எல்லாவுயிர்களும், எம் உயிரின் நேர் --, என்று -என்று கருதி,அவ்வியம் அகன்று அருள் சுரந்து - மனக்கோட்டம் நீங்கிக்கருணை கூர்ந்து, உயிர் வளர்க்கும் செவ்விமையின் - உயிர்களைக் காக்கும் அஹிம்ஸா நெறியின்கண், நின்றவர் - நின்றஇம்முனிவரரின், திருந்தடிபணிந்து - (பிறரும்) நன்னெறியில் திருந்துதற்குக் காரணமான திருவடிகளை வணங்கி,உன் வெவ்வினை கடந்து - உன் தீவினைகளை நீக்கி, உயிர்விளங்கு  -  நின் உயிர் விளங்கப் பெறுவாயாக (என்றான்).




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:30:01(இந்திய நேரம்)