Primary tabs
இயம்பல் - சொல்லல். பிழை - நாய்களைச் செலுத்தியதும் வாளோங்கியதும் முதலாயின, அணியா, செய்யாவென்னும் வாய்ப்பாட்டு எச்சம். (54)
(இ-ள்.) (சுதத்த முனிவர்), இவன் நினைந்ததுஇன்னது என்று - இம்மன்னன் நினைத்தது தற்கொலை புரிதலாகும் (என்று அறிந்து அதனைத் தடுக்காவிடின் தம்மையும் பாவஞ் சேரும்) என்று எண்ணி, கை எடுத்து - யோகநிலை கலைந்து, மன்ன - வேந்தே! ‘நின்மனத்தது விடுத்திடு - நின்மனத்திலுள்ள எண்ணத்தைத் தவிர்வாயாக: மனத்தில் -ஒருவன் மனத்தில், தன் உயிரின் - தன உயிர்போலவே, மன் உயிர்வளர்க்கை - நிலைபேறுடைய பிறவுயிர்களையும் பேணி வளர்ப்பதுவே, தகவு ஆனால் - தகுதியாகுமாயின், நின் உயிரை - உன் உயிரை, நீ களையின் - நீயே மாய்த்துத்கொள்ளின், நின்அருள் அது - நினது அருட்டிறம், என் ஆம் - என்னாகும்? (எ-று.)
முனிவர், தற்கொலை நிகழ்த்தாவாறு அரசனைத்தடுத்தாரென்க.
முனிவர்கள் பத்மாசானமாக உட்கார்ந்தும் காயோத்சர்க்கமாக நின்றும் கைமுதலிய அவயவங்கள் அசையாமலும், வேறு விஷயங்களில் மனம் செல்லாமலும் யோகத்தில் (தியானத்தில்) பொருந்துவர்:அங்ஙனம் யோகம் மேற்கொள்ளுவதை ‘கையிடுதல்’ என்றும், யோகம் கலைவதைக் ‘கையெடுத்தல’ என்றும் கூறுதல் மரபு. ஆதலின் தற்கொலைபுரியாதவாறு அரசனைத் தடுக்கவேண்டி யோகத்தில் கலைந்ததனை, ‘கையெடுத்து’ என்று கூறினார். நீலகேசி, 315-ஆவதுசெய்யுளில், ‘பாவங்கெடுகெனக் கையிட்டு நின்ற’ தென்