Primary tabs
வேறு ஆராய்வது என்? ஞமலி இவை நணுகல - (நீஏவிய)இந்நாய்கள்(இவரை)அணுகா தொழிந்தன, காணாய் - (ஆதலின் இவர் பெருமையை) இவ்வொன்றிலேயே காண்பாயாக.
முனிவரரைக் கண்டதனால் இன்று கொலைத்தொழில் முதலிய குற்றங்கள் நின்னைச் சாராதொழிந்தனவென்றானென்க.
யோகம் - தபோயோகம், இதை, மேரு. 144, 145 ல்காண்க, தவசிகள் முன்னர், இயல்பாகப் பகையுள்ள உயிர்களும் தீங்கு செய்யாமையை, மேரு.143ல் காண்க, சொல்கள் இரண்டும் அசைகள். வேட்டையாடி விலங்குகளைக் கொல்லவந்த உனக்கும் கொலைத்தொழில் தவிர்ந்தது என்பதை வலியுறுத்துவான், ‘கொலை வேலோய்‘ என்று விளித்தான்.(53)
(இ-ள்.) என்று அவன் உளம்கொள இயம்பினன் -என்றிவ்வாறு அரசன் மனங்கொள்ளுமாறு (வணிகள்) கூறினான்: இயம்ப - அங்ஙனம் கூற (கேட்டிருந்த அரசன்), ‘சென்று - (இம்முனிவரர் அருகில்) போய், திருவடிமலர் (இவருடைய பாத தாமரைகளை, சென்னிமிசை அணியா-என்தலையில் அணிந்து வணங்கி, இன்று - இன்று நிகழ்ந்த, எனது பிழை தணிய - என் பிழை நீங்குமாறு, என் தலை அரிந்து-என் தலையைக் கொய்து, நின்ற முனி சரணில் இடல்-யோகத்தில் நின்ற முனிவன்பாதங்களில் இடுவேனாக, என்று நினைகின்றான் - என்று மன்னன் நினைக்கின்றனன். (எ-று.)
அரசன், தன் தலையை அரிந்து முனிவர் பாதத்திலிடக்கருதினானென்க.
1 சரணினிட என்றும் பாடம்.