தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 285 -

திருமேனியை, யானும் அலது-(இது) என் ஆத்ம ஸ்வரூபம்அன்று, எனதும் அலது - என்னுடையதும் அன்று,  இதமும்அலது - நன்மை தருவதும் அன்று, என்று - என்று கருதி,மகிழானாய் - (அதனை) விரும்பிப் போற்றாதவனாகி, ஏனைவினை மாசு - மற்றைத் தீவினைகளாகின்ற மாசு,  தனது உருவின் நிறுவாது - தனது ஆத்ம ஸ்வரூபத்தில் நிறுத்தாமல் (நிற்காதபடி செய்து), ஞானம் ஒளி நகை செய் குணம் -ஞானஜோதியாகிய மகிழ்ச்சியைத் தரும் நற்குணங்களையே, நாளும் அணிகின்றான் - எந்நாளும் அணிந்திருக்கின்றான்.

   முனிவர் பெருமையை வணிகன் கூறினானென்க.

   உயிரையும் அதன் குணங்களையும். ‘யானும் எனதும்‘ என்று குறிப்பிட்டான்.  ‘யானெனதென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்த வுலகம் புகும்‘  எனவும், ‘மற்றுந்தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க, லுற்றார்க் குடம்பு மிகை, எனவும், (குறள் - 346இ 345.) தேவர் கூறியது ஈண்டு அறிதற்பாலன.  துகள் துன்று கருமேனியினன்‘(266) என்று கருதிய வேந்தனுக்கு, வினைத்துகளை நீக்கியமுனிவரர் உயிரினின்றும் அன்யமான உடலைப் போற்றிக் காத்தலை வேண்டார் என்று தெரிவித்தானென்க.  குணங்களை அணிகலனாகக்கூறும் வழக்கினை, ‘குணமணி... யணிந்து‘(மேரு,421) என்று கூறுவதனாலறியலாகும்.(52)

272. 
ஈடின்முனி யோகினது பெருமையினி லிறைவ
 
காடுபடு கொலையினொடு கடியவினை நின்னைக்
 
கூடுவதா ழிந்ததுகொ லின்றுகொலை வேலோய்
 
நாடுவதென் ஞமலியிவை நணுகலகள் காணாய்.

(இ-ள்.) இறைவ - --, ஈடு இல் முனி - ஒப்பில்லாதஇம்முனிவரரின், யோகினது பெருமையினில் - யோகத்தின்பெருமை (மஹிமை)யினால், காடுபடு கொலையினொடு கடியவினை-காட்டிடத்தே நின்னால் உண்டாகுங் கொலைத் தொழிலோடு (அதனால் நேரவிருந்த) மிக்க தீவினையும், இன்று - இன்றைக்கு, நின்னைக் கூடுவது ஒழிந்தது - நின்னைச்சாராது ஒழிந்தது:  காலைவேலோய் - கொல்லும் வேலையுடைய வேந்தே, நாடுவது என் -




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:30:50(இந்திய நேரம்)