Primary tabs
எனவும், ‘தலைப்பட்டார் தீரத் துறந்தார்‘ எனவும், (குறள்,344, 348.) தேவர் கூறியது அறிக. (50)
(இ-ள்.) (இம்முனிவன்), வானவரும் மண்ணின் மிசைஅரசர்களும் மலைமேல் தானவரும் - தேவர்களும் இவ்வுலகத்திலுள்ள அரசர்களும் மலைமேல் வாழும் தானவர்களும், வந்துதொழு - வந்து வணங்குகின்ற, தவ உருவு கொண்டான் - தவவேடம் பூண்டவனாகி, மனம் ஊனம் இன்றி - உள்ளத்தில் பற்று முதலிய குற்றமின்றி, உயிர்கட்கு உறுதிஉள்ளி - உயிர்களுக்கு நன்மை புரிதலை நினைத்து, கானம் மலை நாடுகள் கலந்து திரிகின்றான் - காடு மலை நாடுகள் இவற்றில் (முனிவர்க்குக் கூறிய இலக்கணத்தின்படி) ஓரிடத்தும் நீடிக்காது செல்கின்றவ னாயினான். (எ-று.)
இம்முனி, யோகம் சரியைக் கேற்றவாறு அவ்வவ்விடங்களில் தங்கிச் செல்வானாயின னென்க.
மிசை - மேல்; ஏழனுருபு. மலை - வெள்ளிமலை. விஜயார்த்த கிரி எனவும் வழங்கும். தானவர் - வித்யாதரர். இம்மலையில் வாழும் மாந்தர் வித்யா தேவதைகளின் துணையால் வானில் இயங்குந் தன்மையுடையர்: அதனால் வித்யாதரர் என்ற பெயர் பெற்றனர். இதன் விவரம், சூளாமணி மேருமந்தரம் முதலிய நூல்களில் காண்க. (51)
(இ-ள்.) மானம் உடை மாதவன் - தவப்பெருமையுடைய சிறந்த தஷ்வியாகிய இவர், இன்மேனி-(தமது) நல்ல
1 தொழ
2 ஊனமெனு
3 கானுமலை.