Primary tabs
வானவர் இன்பம் அல்லால் - (மறுமையில் அவர்களுக்கு) தேவரின்பம் உண்டாதலே யல்லது. மருள் செய வருவது உண்டோ - மயக்கம் தருமாறு வேறு துன்பப் பிறவி வருவது உண்டோ? (இல்லையென்றபடி).
திருவறத்தைக் கைக்கொண்டார் தேவராவ ரென்க.
தானம் நான்கு வகை. அவை:--கருணை. அறிவு, உண்டி, உறையுள் என்ப. அபயம் நல்குதல் - கருணையுடன் புகல் அளித்தல். இது தயாதானம் எனப்படும். இதனை, ‘கருணையு மறிவு முண்டி உறையுளு மீதல்’ எனவும், ‘வதங்கள் பன்னிரண்டு மேவி வையகத் துயிர்கட்கெல்லாம், இதஞ்செய்து வருந்தில் வெந்தீ யிடுவெண்ணெய் போன்றிரங்கிச், சிதைந் தின்னாதன செய்தார்க்கு மினியவே செய்து சிந்தை, கதங் கடிந்தொழுகல் நல்லோர் கருணையைக் கொடுத்தலாமே.’ (மேரு. 345, 346.) எனவும் வருவனவற்றால் அறியலாகும். ஈண்டுக் கூறிய கருணையில் அபயதானம் அடங்கும். இனி, இந்தத் தானம்: உண்டி, மருந்து, உறையுள், ஞானம் என வேறுவகையாகவும் கூறப்படும். கொலை என்றதனால் தேன் உண்ணாமை முதலியனவும் கொள்க. ‘இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன்...... மாட்டு’ (குறள். 5) என்பது ஈண்டு அறிதற்பாலது. சேராதிறைவன என்றும் பாடம். (81)
(இ-ள்.) என்றலும் - என்று இவ்வாறு சுதத்த முனிவரர் கூறியருளியதும், அடிகள் பாதத்து - அம்முனிவரர் திருவடிகளில், எழில் முடி மலர்கள் சிந்த - (மன்னன்தன்) அழகிய முடியிலிருந்த மலர் சிதற (த்தாழ்ந்து வணங்கி), கன்றிய வினைகள் தீர - நெடுநாட்பட்ட தீவினைகள் விலகும் வண்ணம், கருணையின் உருகி - அருளினால் மன மிளகி, நெஞ்சில்